இன்று சூரிய கிரகண நேரத்தில் இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருங்க!!

 
இன்று சூரிய கிரகண நேரத்தில் இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருங்க!!

இன்று டிசம்பர் 4, சனிக்கிழமை இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் . இந்த சூரிய கிரகணம் காலை 10:59 மணி முதல் பிற்பகல் 03:07 மணி வரை நீடிக்கும் மிக நீண்ட சூரிய கிரகணம். இதனை இந்தியாவில் இருந்து நேரடியாக காண இயலாது.

அதே நேரத்தில் இந்த சூரிய கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள்.

இன்று சூரிய கிரகண நேரத்தில் இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருங்க!!

அதன்படி இந்த சூரிய கிரகணம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள் மட்டும் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
டிசம்பர் 4 இன்று சனிக்கிழமை கிருஷ்ண பட்ஷ அமாவாசை.


மேஷம் :


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் அசுபமாக உள்ளது. இதனால் ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். தீராத நோய் அல்லது விபத்து ஏற்படலாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டியது அவசியம்.


கடகம் :


கடக ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் சில அசுப பலன்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரிடமும் கவனமாக எச்சரிக்கையுடன் பேச வேண்டியது அவசியம்.

துலாம்:


துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அசுப பலன்களை ஏற்படுத்தலாம். அன்றைய தினம் கோபம், எரிச்சல் இவைகளை தவிர்ப்பது நல்லது. இதனால் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளலாம். உடல் ஆரோக்கிய குறைபாடுகளும் உருவாகலாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் மனக்குழப்பத்தை உருவாக்கலாம். இதனால் பதற்றம், அமைதியின்மை ஆகியவை ஏற்படலாம். பொறுமை, நிதானம் அவசியம். தொழிலில் புதிய முயற்சிகளில் எச்சரிக்கை தேவை.

இன்று சூரிய கிரகண நேரத்தில் இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருங்க!!

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் அசுப பலன்கள் உருவாகலாம். இதனால் வீண் அலைச்சல் , செலவுகள் அதிகரிக்கும். காரியத் தடை கால தாமதம் உருவாகலாம். வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் செல்லுங்கள்

From around the web