இந்தியாவுக்குள் நுழைந்தது ஒமைக்ரான்- கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று..!!

இந்தியாவுக்குள் நுழைந்தது ஒமைக்ரான்- கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று..!!

உலகிலேயே முதன்முதலாக கொரோனாவின் புதிய ஒமைக்ரான் திரிபு தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டது.

இதனால் இந்தியாவில் விமான போக்குவரத்து வருகை மற்றும் புறப்பாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் நாட்டில் 2 பேருக்கு ஒமைக்ரான் கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குள் நுழைந்தது ஒமைக்ரான்- கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று..!!

தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பகுப்பாய்வு சோதனை மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறி மட்டுமே தென்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குள் நுழைந்தது ஒமைக்ரான்- கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று..!!

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய லாவ் அகர்வால், ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த ஒமைக்ரான் வைரஸ், 29 நாடுகளில் 373 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் கூறினார்.

From around the web