தடுப்பூசியால் கொரோனாவை தடுக்க முடியாது- ஆய்வில் தெரியவந்த உண்மை..!!

 
தடுப்பூசியால் கொரோனாவை தடுக்க முடியாது- ஆய்வில் தெரியவந்த உண்மை..!!

டெல்லியில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக்கொண்ட 113 மருத்துவப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து செய்யப்பட்ட மருத்துவ ஆய்வில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியன் சார்ஸ் – கோவிட் 2 ஜீனோமிக் கான்சார்டியம் (INSACOG), சி.எஸ்.ஐ.ஆர், தேசிய நோய்த்தடுப்பு ஆணையம் ஆகியவை இணைந்து இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டன. அதில், கொரோனா தடுப்பூசி முழுமையாக எடுத்துக்கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு வரக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

தடுப்பூசியால் கொரோனாவை தடுக்க முடியாது- ஆய்வில் தெரியவந்த உண்மை..!!

அதன்படி இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவருக்கு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவும் வாய்ப்புள்ளது என்றும் தடுப்பூசி போடாதவர்கள் இருந்தாலும், அவர்களிடம் இருந்தும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு கொரோனா பரவும் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் கொரோனா தடுப்பூசியால் எந்த பலனும் இல்லை என்றும் கூறிவிட முடியாது. தற்போது டெல்டா வகை கொரோனா அதிகம் பரவுகிறது என்பதால், தடுப்பூசி செலுத்தியவர்கள் மிக மிக கவனமாகவும், மாஸ்க் அணிந்தும் இருக்க வேண்டுமென்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

From around the web