நவம்பர் 29-ல் வேளண் சட்டங்கள் ரத்து: டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு!

 
நவம்பர் 29-ல் வேளண் சட்டங்கள் ரத்து: டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு!

நாடாளுமன்றம் துவங்கும் முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளதையடுத்து, டிராக்டர் பேரணியை ஒத்தி வைப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

நவம்பர் 29-ல் வேளண் சட்டங்கள் ரத்து: டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு!

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நேற்றுடன் (நவம்பர் 26) ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. விவசாயிகளின் அயராத போராட்டத்தால், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அண்மையில் அறிவித்தார். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை வரவேற்ற விவசாயிகள் மேலும் சில கோரிக்கைகளுடன் போராட்டங்களை தொடர்ந்து வந்தனர்.

அதில், விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்தல், பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாக்களை தாக்கல் செய்தல், உயிர் நீத்த விவசாயிகளின் நினைவாக நினைவு சின்னங்கள் அமைக்க இடம் ஒதுக்குதல் ஆகிய கோரிக்கைகளுடன் வருகிற 29 ஆம் தேதி பாராளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளான நவம்பர் 29 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். ஜீரோ பட்ஜெட் விவசாயம், குறைந்த பட்ச ஆதார விலை குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்படும். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுதல் மற்றும் உயிர்நீத்த விவசாயிகளுக்கு நினைவுச்சின்னம் அமைக்க இடம் ஒதுக்குதல், நிவாரணம் வழங்குதல் ஆகியவை அனைத்தும் மாநில அரசுகள் கட்டுப்பாட்டில் வருகிறது. இது தொடர்பில் மாநில அரசுகள் கொள்கை முடிவு எடுத்துக் கொள்ளலாம்’ என கூறியிருந்தார்.

நவம்பர் 29-ல் வேளண் சட்டங்கள் ரத்து: டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு!

இதனையடுத்து விவசாய சங்கங்கள் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, விவசாய சங்கத்தினர் நவம்பர் 29 ஆம் தேதி அறிவித்திருந்த டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை, போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள், லகிம்பூர் வன்முறை ஆகிய விவகாரங்களில் மத்திய அரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

From around the web