குட் நியூஸ்! கொரோனாவை குணப்படுத்த 2-டிஜி மருந்து விற்பனைக்கு வந்தது!

 
குட் நியூஸ்! கொரோனாவை குணப்படுத்த 2-டிஜி  மருந்து விற்பனைக்கு வந்தது!

நல்ல செய்தியாக, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘2 – டிஜி’ மருந்து கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்துவதற்கு சந்தையில் விற்பனைக்கு வந்தது.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், கண்டுபிடித்துள்ள ‘2 – டிஜி’ மருந்தை கொரோனாவால் மிதமாக மற்றும் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தந்தால், நல்ல பலன் அளிப்பது தெரியவந்துள்ளது.

குட் நியூஸ்! கொரோனாவை குணப்படுத்த 2-டிஜி  மருந்து விற்பனைக்கு வந்தது!

இந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனத்திற்கு, அவசரகால பயன்பாட்டிற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 2 – டிஜி மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்தது. 99.5 சதவீதம் துாய்மையான இந்த மருந்து ஒரு பாக்கெட் விலை 999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அனைத்து பெருநகரம் மற்றும் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாடு முழுதும் மருந்து விற்பனை விரிவுபடுத்தப்படும்.

From around the web