குட் நியூஸ்! திரையரங்குகள் திறக்க அனுமதி! முதல்வர் அதிரடி!

 
குட் நியூஸ்! திரையரங்குகள் திறக்க அனுமதி! முதல்வர் அதிரடி!


இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்புக்களின் அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

குட் நியூஸ்! திரையரங்குகள் திறக்க அனுமதி! முதல்வர் அதிரடி!

இதன் படி திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் ஜூலை 26 முதல் உயர்கல்வி நிறுவனங்களைத் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்துக்கான ஊரடங்கு 9 மணிக்குப் பதில் 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.இது குறித்த அடுத்த கட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று மாலை வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web