குட்நியூஸ்! தடுப்பூசிகளை கொண்டு செல்ல டிரோன்கள்!

 
குட்நியூஸ்! தடுப்பூசிகளை கொண்டு செல்ல டிரோன்கள்!

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடு்ப்பூசிகள் அனைத்து பிரிவினரையும் சென்றடைய வேண்டும் என்பதில் அரசுகள் மிகக் கவனமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக தொலைதூர பகுதிகள் மற்றும் செல்வதற்கு கடினமான பகுதிகளிலும் தடுப்பூசியை கொண்டு சேர்க்கவும் நாட்டின் கடைசி மைல் தொலைவையும் இத்திட்டத்துக்குள் இணைக்கவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

குட்நியூஸ்! தடுப்பூசிகளை கொண்டு செல்ல டிரோன்கள்!

இந்த பகுதிகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை கொண்டு சேர்க்க ஆளில்லா குட்டி விமானங்கள் அதாவது டிரோன்களை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த முயற்சிகளை டிரோன்கள் மூலம் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகளை கான்பூர் ஐ.ஐ.டி.யுடன் இணைந்து ஐ.சி.எம்.ஆர். வெற்றிகரமாக நடத்தி வருகிறது. முதற்கட்ட முடிவுகளின் அடிப்படையில் டிரோன்கள் மூலம் தடுப்பூசிகளை கொண்டு சேர்ப்பதற்கான நிலையான நெறிமுறை வகுத்துள்ளது. மேலும் இந்த பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

குட்நியூஸ்! தடுப்பூசிகளை கொண்டு செல்ல டிரோன்கள்!

கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு அப்பால் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் டிரோன் மூலம் தடுப்பூசியை வினியோகிக்கவும், மீண்டும் அதே இடத்துக்கு டிரோனை கொண்டு சேர்க்கவும் ஐ.சி.எம்.ஆர். பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

முதல் கட்ட பரிசோதனையில் வான் வழியாக 35 கி.மீ. தொலைவு வரை சென்று வரும் திறன்பெற்றதாக டிரோன்கள் இருக்க வேண்டும் என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளன.
இந்த டிரோன்களுக்கான பணிக்காலம் 90 நாட்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டிரோன் ஆபரேட்டரின் திறமை மற்றும் திட்டத்துக்கான தேவைகளின் அடிப்படையில் இந்த பணிக்காலம் நீட்டிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web