குட் நியூஸ்! நாடு முழுவதும் 3,61,000 பேருக்கு புது வீடு!! மத்திய அரசு ஒப்புதல்!

குட் நியூஸ்! நாடு முழுவதும் 3,61,000 பேருக்கு புது வீடு!! மத்திய அரசு ஒப்புதல்!

இந்தியா முழுவதும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் நோக்கில் கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசால் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரையில் 112.4 லட்சம் வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 48.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டு விட்டது.

குட் நியூஸ்! நாடு முழுவதும் 3,61,000 பேருக்கு புது வீடு!! மத்திய அரசு ஒப்புதல்!

இந்நிலையில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மேலும் 3.61 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்தத் திட்டத்தின் கீழ் இயங்கும் மத்திய ஒப்புதல் அளித்தல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் 54ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கலந்துகொண்டன.

From around the web