விரைவில் திறக்கப்படும் IKEA ஷாப்பிங் மால்- எங்கு தெரியுமா..?

 
விரைவில் திறக்கப்படும் IKEA ஷாப்பிங் மால்- எங்கு தெரியுமா..?

ஸ்வீடன் நாட்டின் புகழ்பெற்ற வர்த்தக நிறுவனமான ஐக்கியா, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் உலகளவில் கொடிக்கட்டி பறக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் முதல் கிளையை ஹைதராபாத்தில் அமைத்தது.

இந்நிலையில் புதியதாக வணிக வளாகம் ஒன்றை ஐக்கியா நிறுவனம் இந்தியாவில் தொடங்குகிறது. இதற்காக இங்கியா நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ள ஐக்கியா, குர்கானில் இந்த வணிக வளாகத்தை கட்டமைக்கிறது.

விரைவில் திறக்கப்படும் IKEA ஷாப்பிங் மால்- எங்கு தெரியுமா..?

வரும் 2022-ம் ஆண்டு இதற்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்படவுள்ளன. இதற்காக ரூ. 3500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் 2500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய ஐக்கியா நிறுவனத்தின் இந்திய சி.இ.ஓ பீட்டர் பெட்சல், இங்கியா உடன் இணைந்து ஐக்கியா ஸ்டோர் இந்தியாவில் வருவதில் மகிழ்ச்சி. நிச்சயம் எங்களுடைய தயாரிப்புகளுக்கு மக்களிடம் கவனம் உருவாகும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

From around the web