இன்று முதல் மதுபானக் கடைகள் திறப்பு! புதுவையில் குடிமகன்கள் கொண்டாட்டம்!

 
இன்று முதல் மதுபானக் கடைகள் திறப்பு! புதுவையில் குடிமகன்கள் கொண்டாட்டம்!

புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகளைத் திறக்க இருப்பதாக தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதுமே பரவி வந்த கொரோனா 2வது அலை, இப்போது தான் குறையத் துவங்கியுள்ளது. தமிழகத்தையடுத்து புதுவையிலும் இதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் புதுவையில் மதுக்கடைகளைத் திறக்க மாநில அரசு அறிவித்துள்ளது.

இன்று முதல் மதுபானக் கடைகள் திறப்பு! புதுவையில் குடிமகன்கள் கொண்டாட்டம்!

முன்னதாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகள் திறக்கும் நேரம் மற்றும் விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடை திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. மதுபானக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்னும் அனுமதியளிக்காத நிலையில், இப்போதே தினந்தோறும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து மதுப்பாட்டில்களைக் கடத்தி வந்து போலீசாரிடம் மாட்டிக் கொள்கின்றனர். அப்படியும் சிலர் கள்ளச் சந்தையில் மதுப்பாட்டில்களை விற்கும் போக்கு இருந்து வருகிறது. தற்போது புதுவையில் மதுக்கடைகள் திறக்க இருப்பதால், குடிமகன்கள் குஷியில் உள்ளனர்.

From around the web