அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

 
அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி:  மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதியில் நாளை (நவம்பர் 29) புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழக கடலோரா பகுதிகளில் டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும், அந்தமானில் கடலோர பகுதிகளில் புயல் காற்று வீசும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி:  மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரிக்கடலுக்கும் இலங்கை கடலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை நவம்பர் 29 ஆம் தேதி அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமான அந்தமான் கடற்பகுதிகளில் நவம்பர் 29, 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மணிக்கு 40 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

From around the web