மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் புதிய வழிக்காட்டுதல்..!!

மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் புதிய வழிக்காட்டுதல்..!!

மாற்றுத்திறனாளிகள் அவர்கள் உடலில் பொருத்தியுள்ள செயற்கை உறுப்புகளை விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனை என்கிற பெயரில் அகற்ற சொல்லக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜீஜா கோஷ் என்கிற மாற்றுத்திறனாளி கொல்கட்டாவில் இருந்து கோவாவுக்கு பயணம் செல்ல இருந்தார். அப்போது பாதுகாப்பு காரணங்கள் என்று குறிப்பிட்டு, அவர் தனது உடலில் பொருத்தியிருந்த செயற்கை உறுப்புகள் அகற்றப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் புதிய வழிக்காட்டுதல்..!!

இதனால் அன்று அவர் கோவாவுக்கு செல்ல முடியாமல் போனது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பு பரிசோதனை நடைமுறைக்கு தகுந்த அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று மனுவில் அவர் முறையிட்டு இருந்தார்.

மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் புதிய வழிக்காட்டுதல்..!!

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மாற்றுத்திறனாளிகளிடம் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்களுடைய கவுரவம் பாதிக்கும் வகையில் அதிகாரிகள் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. விமான நிலையங்களில் மாற்று திறனாளிகளிடம் செயற்கை உறுப்புகளை அகற்றும்படி கூறக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

From around the web