இது அவ்வளவு பெரிய பாலியல் குற்றமல்ல- சர்ச்சையில் சிக்கிய உயர்நீதிமன்றம்..!

 
இது அவ்வளவு பெரிய பாலியல் குற்றமல்ல- சர்ச்சையில் சிக்கிய உயர்நீதிமன்றம்..!

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 10 வயது சிறுவனுடன் அதே பகுதியைச் சேர்ந்த நபர் வாய்வழியாக உடலுறவு கொண்டார். அதோடு சிறுவனுக்கு ரூ. 20 கொடுத்துவிட்டு, இதுகுறித்து யாரிடமும் சொல்ல கூடாது என்று கூறி மிரட்டியுள்ளார்.

ஆனால் சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமையை குடும்பத்தாரிடம் கூறியுள்ளான். உடனடியாக பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அந்த நபரை கைது செய்தது.

இது அவ்வளவு பெரிய பாலியல் குற்றமல்ல- சர்ச்சையில் சிக்கிய உயர்நீதிமன்றம்..!

இதுதொடர்பான வழக்கை விசாரித்த விசாரித்த அலகாபாத் கீழமை நீதிமன்றம், இதை கடுமையான பாலியல் குற்றமாக குறிப்பிட்டு குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர் இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி அணிக் குமார் ஓஜா, குற்றவாளி மைனருடன் உடலுறவு கொண்டுள்ளார். இதை கடுமையான பாலியல் குற்றமாக கருத முடியாது என்று கூறி தண்டனைக் காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக குறைத்தார்.

இது அவ்வளவு பெரிய பாலியல் குற்றமல்ல- சர்ச்சையில் சிக்கிய உயர்நீதிமன்றம்..!

இதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பாலியல் வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் ஆடைக்கு மேல் தொட்டால் பாலியல் குற்றமாக கருத முடியாது என்று தீர்ப்பளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், கண்டிப்பு காட்டியது. இந்நிலையில் மற்றொரு போக்ஸோ வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு போக்சோ வழக்குகளை நீர்த்து போக செய்துவிடக்கூடும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

From around the web