நொய்டாவில் கொரோனா தடுப்பூசி போட, சமூக இடைவெளியை மறந்து, குவிந்த மக்கள்

நொய்டாவில் கொரோனா தடுப்பூசி போட, சமூக இடைவெளியை மறந்து, குவிந்த மக்கள்

உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் பிரிவு 30ல் உள்ள மாவட்ட மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான மக்கள் குவிந்ததாலும், சமூக இடைவெளியை பின்பற்ற மறந்தனர். முக கவசங்களை அணிந்தபோதும், முறையாக இடைவெளி விட்டு, வரிசையில் நிற்காமல் கும்பலாக கூடி இருந்தனர். இதனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் சூழல் காணப்பட்டது.

நொய்டாவில் கொரோனா தடுப்பூசி போட, சமூக இடைவெளியை மறந்து, குவிந்த மக்கள்

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக, எங்களுக்கு குறைந்த அளவு தடுப்பூசிகள் கிடைக்கிறது. இன்று, எங்களுக்கு 3000 தடுப்பூசிகள் கிடைத்தன. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற எங்கள் ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். மேலும் தடுப்பூசிக்காக நாங்கள் ஒரு புதிய மையத்தையும் உருவாக்கினோம் என்று நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

From around the web