இந்திய கடற்படையின் வான்படை பிரிவிற்கு குடியரசுத் தலைவரின் கலர் விருது

 
இந்திய கடற்படையின் வான்படை பிரிவிற்கு குடியரசுத் தலைவரின் கலர் விருது

இந்திய கடற்படையின் வான்படை பிரிவிற்கு குடியரசுத் தலைவரின் கலர் விருது வழங்கப்பட உள்ளது.

செப்டம்பர் 6-ஆம் தேதி கோவாவில் ஐஎன்எஸ் ஹன்சா கப்பலில் நடைபெறும் பாரம்பரிய அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இந்த விருதினை வழங்குவார். நிகழ்ச்சியின்போது தபால்துறையால் சிறப்பு தின உறையும் வெளியிடப்படும். கோவா ஆளுநர், மத்திய பாதுகாப்பு அமைச்சர், கோவா முதல்வர், கடற்படை தளபதி மற்றும் இதர பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

இந்திய கடற்படையின் வான்படை பிரிவிற்கு குடியரசுத் தலைவரின் கலர் விருது

தலைசிறந்த சேவையை அளிக்கும் ராணுவப் பிரிவைக் கௌரவிக்கும் வகையில் மிக உயரிய விருதாக குடியரசுத் தலைவரின் கலர் விருது கருதப்படுகிறது. இந்திய ராணுவப் படைகளில் முதன் முதலாக, கடற்படைக்கு கடந்த 1951-ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் இந்த விருது வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கிழக்கு, மேற்கு மற்றும் கிழக்கு கடற்படைகள், நீர்மூழ்கிக் கப்பல் படைகள், ஐஎன்எஸ் சிவாஜி, இந்திய கடற்படை அகாடமி உள்ளிட்டவை இந்த விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web