தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறை பிடித்த கேரள போலீஸ்! 4 மணி நேரத்திற்கு பின் விடுதலை

 
தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறை பிடித்த கேரள போலீஸ்! 4 மணி நேரத்திற்கு பின் விடுதலை

ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்காக கேரளா சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகளை கேரள போலீசார் சிறை பிடித்து 4 மணி நேரம் கழித்து விடுவித்துள்ளனர்.

தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறை பிடித்த கேரள போலீஸ்! 4 மணி நேரத்திற்கு பின் விடுதலை

தமிழ்நாடு, கோவையை அடுத்த நவக்கரையில் ரயில் மோதியதில் நேற்று 3 காட்டு யானைகள் உயிரிழந்தன. யானைகளின் உயிரிழப்புக்கு அதிவேகமாக ரயிலை இயக்கியதே காரணம் என்று சொல்லப்பட்டது. இது குறித்து விசாரிக்க தமிழக வனத்துறையில் பணிபுரியும் அருண்சிங், அய்யப்பன், சசி, பீட்டர் உள்ளிட்ட 6 பேர் நேற்று பாலாக்காடு சென்றுள்ளனர். அப்போது அங்கேயிருந்த கேரள ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்களால் தமிழக வனத்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும், ரயில்வே நிர்வாகம் அதிகாரம் இல்லாமல் ரயில் எஞ்சினில் இருந்து வேகம் கண்டறியும் கருவியை கழட்டியதாக கூறி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

தமிழக வனத்துறை அதிகாரிகள் கேரளாவில் சிறைபிடிக்கப்பட்ட தகவல் தமிழக வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தமிழக அதிகாரிகள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதை தந்தை பெரியார் திராவிட கழகம் உட்பட சில அமைப்புகள் கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தமிழக வனத்துறை அதிகாரிகள் கேரள அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் சிறைபிடிக்கப்பட்ட தமிழக வன ஊழியர்கள் 4 மணி நேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டனர். ரயிலை வேகமாக இயக்கிய ஓட்டுனகள் சுபைர் மற்றும் அகில் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் ஜாமினில் வெளியாகியுள்ளனர்.

From around the web