18 வயதுக்குள்ளானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை!!

 
18 வயதுக்குள்ளானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை!!

18 வயதிற்குள்ளான, கொரோனா தாக்கியவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா 3வது அலை குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படும் நிலையில், பாதிப்பை நிர்வகிப்பதற்கான சில புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் ஊசி போடக்கூடாது என மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ரெம்டெசிவிர் மருந்து போதுமான பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வழங்கும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லாததால் குழந்தைகளில் செலுத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

18 வயதுக்குள்ளானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை!!

அறிகுறி அற்ற மற்றும் லேசான அறிகுறி கொண்ட குழந்தைகளில் ஸ்டெராய்டுகளின் பயன்பாடு தீங்கு விளைவிக்கும். இது கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

லேசான அறிகுறி கொண்ட குழந்தைகளுக்கு, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி நீங்க பாராசிட்டமால் 10-15 mg/kg/dose -ஐ 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம்.

18 வயதுக்குள்ளானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை!!

சிறுவர்கள் மற்றும் இளம்பருவத்தில் உள்ள குழந்தைகளில் இருமல் பிரச்சனையை போக்க சூடான நீரில் வாய் கொப்பளித்தல் போன்றவற்றை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. மிதமான மற்றும் கடுமையான அறிகுறிகளோடு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் குழந்தைகளில், ஆக்ஸிஜன் சிகிச்சையை உடனடியாக தொடங்க வேண்டும்.

கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறியை உங்கள் குழந்தை உருவாகினால், தேவையான மேலாண்மை தொடங்கப்பட வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 6 நிமிட நடை சோதனை எடுக்கவும் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. குழந்தையின் விரலில் ஆக்சிமீட்டரை இணைத்து, தொடர்ந்து 6 நிமிடங்கள் நடக்கச் சொல்லுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web