மோதி சிதறிய லாரி! அவசர அவசரமாக ஓடி வந்து பொருட்களை அள்ளிச் சென்ற கிராம மக்கள்!

 
மோதி சிதறிய லாரி! அவசர அவசரமாக ஓடி வந்து பொருட்களை அள்ளிச் சென்ற கிராம மக்கள்!

கொரோனா 2வது அலை வாட்டி வதைக்கிறது என்று புலம்பி வருகிறோம். ஆனால், மனித நேயத்தைப் பொருத்த வரையில் கொரோனா 2வது, 3வது மட்டுமல்ல..100வது அலை வந்தாலும் கூட மனிதம் என்றால் என்ன என்று தான் கேட்பார்கள் போல.

அப்படியானதொரு சம்பவம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது. நேற்று மாலை மராட்டியத்தில் அவுரங்காபாத் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது ஒரு கண்டெய்னர் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்தில் ஓட்டுநரும், அவரது உதவியாளரும் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குவிந்து விட்டனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்யாமல், காப்பாற்றவும் முயற்சிக்காமல் லாரியில் இருந்த சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்களை வாரி சுருட்டி சென்றனர்.

விபத்து நடந்த அந்த லாரியில், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், எல்.இ.டி. டி.வி.க்கள் மற்றும் பிற மின்னணு பொருட்கள் இருந்துள்ளன. விபத்து நிகழ்ந்ததில், லாரியில் இருந்து பொருட்கள் கீழே கிடந்துள்ளன. கிராமவாசிகளும், அந்த வழியே சென்றவர்களும் கிடைத்த பொருட்களை சுருட்ட தொடங்கினர். இன்னும் சில நல்லவர்கள் லாரியின் கதவை உடைத்து திருடிச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. போலீசாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிலர் பொருட்களை ஒப்படைத்துள்ளனர். ஆனால், பொருட்களுடன் தப்பி சென்ற சிலரை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

From around the web