அதிர்ச்சி... பைக் வாங்குறதுக்காக குழந்தையை விற்ற தந்தை!
“இவன் எல்லாம் எதுக்காக உயிரோடு இருக்கான்?” என்று அந்த பகுதி மக்கள் காதுபடவே தூற்ற தொடங்கினார்கள். பைக் வாங்குவதற்காக பெற்ற குழந்தையை யாராவது விற்பார்களா? இப்படியொரு படுபாதக செயலில் ஈடுபட்டிருந்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்மு பெஹ்ரா. இவருக்கு திருமணமாகி 2 மமனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், தர்முவின் 2வது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தர்மு பெஹ்ரா தனது 2வது மனைவியின் குழந்தையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை இடைத்தரகர்கள் மூலம் விற்றார்.
பின்னர், குழந்தையை விற்று கிடைத்த பணத்தில் புதிய பைக் ஒன்றை வாங்கினார். அவரும் புதிதாக வாங்கிய பைக்கில் குடும்பத்துடன் சுற்றி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், குழந்தைகள் நலக் குழுவிடம் இது குறித்து புகார் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையின் தந்தை புதிய பைக் வாங்குவதற்காக குழந்தையை விற்றது உறுதியானது.
இதைத் தொடர்ந்து போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசாஆர், தர்மு மற்றும் குழந்தையின் இரண்டாவது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!