அதிர்ச்சி! கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 37 ஆக உயர்வு -கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

 
அதிர்ச்சி! கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 37 ஆக உயர்வு -கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலும், ஜிகா வைரஸூம் கேரளாவை மிரள வைத்து கொண்டிருக்கிறது.

கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலை பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் உள்பட இன்னும் சிலருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரள அரசு தீவிரமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதிர்ச்சி! கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 37 ஆக உயர்வு -கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

இந்த நிலையில், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி தொற்று நோய் பரிசோதனை கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவர்களையும் சேர்த்து இதுவரை 37 பேர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில், ஏழு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

From around the web