அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சிறப்பு விடுப்பு!

 
அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சிறப்பு விடுப்பு!


இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது பாதிப்புக்கள் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.அதன்படி மத்திய அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்.

அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சிறப்பு விடுப்பு!

அதற்கு பிறகும் மருத்துவமனை சிகிச்சை தொடர்ந்தால் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுகிற நாள் வரையில் விடுப்பு அனுமதிக்கப்படும் என மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சம் அறிவித்துள்ளது.இதுகுறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில்
மத்திய அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 20 நாட்கள் வரையில் சிறப்பு விடுப்பு/ ஈட்டிய விடுப்பு வழங்கப்படும். இந்த விடுப்பு, கொரோனா பரிசோதனை முடிவு ‘பாசிட்டிவ்’ என வந்த நாளில் இருந்து நடைமுறையில் வரும்.

அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சிறப்பு விடுப்பு!


‘பாசிட்டிவ்’ என வந்த நாளில் இருந்து 20 நாளுக்கு மேல் சிகிச்சை பெறுகிறபோது, அதற்கான ஆதார சான்று அளித்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.ஒரு கொரோனா நோயாளியுடன் நேரடி தொடர்பு கொண்டால் அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் சமயத்தில் 7 நாட்கள் அவர்கள் வீட்டில் இருந்து பணியை கவனிப்பதாகவோ அல்லது ஓ.டி யில் ஈடுபட்டிருப்பதாகவோ எடுத்துக் கொள்ளப்படும்.


கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டுப்பாட்டு பகுதி அறிவிப்பில் இருந்து விலக்கப்படுகிற வரையில், வீட்டில் இருந்து பணி செய்யலாம். இந்த உத்தரவுகள் அனைத்தும் அடுத்த உத்தரவு வரும் வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும், இந்த அறிவிப்பு அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web