உற்சாகத்தில் இளசுகள்! இன்று முதல் கல்லூரிகள் திறப்பு!

 
உற்சாகத்தில் இளசுகள்! இன்று முதல் கல்லூரிகள் திறப்பு!

இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமே வகுப்புக்கள் நடத்தப்பட்டு கொண்டிருந்தன.கொரோனா காரணமாக +2 பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஜூலை 26 இன்று முதல் கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது . அதன்படி கர்நாடகா மாநிலம் முழுவதும் இன்று பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் உட்பட அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளது.

உற்சாகத்தில் இளசுகள்! இன்று முதல் கல்லூரிகள் திறப்பு!

இதனையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் இருந்து வருவதால் ஆன்லைன் மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட இருக்கிறது. அதுபோல், மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு நேரிடையாக வந்தும் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், மாணவ, மாணவிகள் சமூக இடைவெளி விட்டு அமருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கல்லூரிகளுக்கு இன்று வரும் மாணவர்கள், மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் 80 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

From around the web