மும்பையில் 60 மாடி கட்டிடத்தில் திடீர் தீ!.. ஒருவர் கீழே விழும் பலி!.. அதிர்ச்சி வீடியோ

 
மும்பையில் 60 மாடி கட்டிடத்தில் திடீர் தீ!.. ஒருவர் கீழே விழும் பலி!.. அதிர்ச்சி வீடியோ

மும்பை கரே ரோட்டின் லோயர் பரேல் பகுதியில் உள்ள அவிக்னானா பார்க் குடியிருப்பின் 60 மாடி கட்டிடத்தில், 19 வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று மதியம் 12.25 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவ தொடங்கியதால் 18 மற்றும் 19-வது மாடியில் உள்ள பல வீடுகள் தீப்பற்றி எரிந்தன.

மும்பையில் 60 மாடி கட்டிடத்தில் திடீர் தீ!.. ஒருவர் கீழே விழும் பலி!.. அதிர்ச்சி வீடியோ

இதுபற்றிய தகவல் தீயணைப்பு படைக்கு தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்ட 19-வது மாடியில் ஜன்னல் வழியாக வெளியே வர முயன்ற ஒருவர் கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று மும்பை தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

அந்த நபர் கீழே விழும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web