சூப்பர் நியூஸ்! ‘நீட்’ தேர்வு வினாத்தாளில் மாற்றம்! தேசிய தேர்வு முகமை !

 
சூப்பர் நியூஸ்! ‘நீட்’ தேர்வு வினாத்தாளில் மாற்றம்! தேசிய தேர்வு முகமை !


இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது . பல மாநிலங்களில் பொதுமக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு கடந்த ஆண்டை போல தாமதமாகவே செப்டம்பர் 12 நடைபெற இருக்கிறது.
இதில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் ‘நீட்’ தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு முறையில் குறிப்பிட்ட சில மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

சூப்பர் நியூஸ்! ‘நீட்’ தேர்வு வினாத்தாளில் மாற்றம்! தேசிய தேர்வு முகமை !


ஏற்கனவே உள்ள வினாத்தாளின் படி இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களில் இருந்து தலா 45 வினாக்கள் வீதம் மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண்கள் என்ற வகையில் மொத்தம் 720 மதிப்பெண்கள்.
ஆனால் நடப்பாண்டில் 180 வினாக்கள் என்று இருந்ததை தற்போது 200 வினாக்களாக அதிகரித்து, புதிய வினாத்தாள் முறையை கொண்டு அறிமுகப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களில், ஒவ்வொரு பாடத்திலும் ‘ஏ’ பிரிவில் 35 வினாக்கள், ‘பி’ பிரிவில் 15 வினாக்கள் என 50 வினாக்கள் அடிப்படையில் மொத்தம் 200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்படும். ‘பி’ பிரிவில் உள்ள 15 வினாக்களில் 10 வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் நியூஸ்! ‘நீட்’ தேர்வு வினாத்தாளில் மாற்றம்! தேசிய தேர்வு முகமை !


இது தவிர, மற்ற அனைத்து வினாத்தாள் வடிவமைப்புகளும் பழைய முறைப்படியே இருக்கிறது.மாணவர்களின் படிப்பு சுமையை குறைக்கும் வகையில் இந்த புதிய வினாத்தாள் வடிவமைப்பு முறையை கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதிரி வினாத்தாள் https://www.nmc.org.in/neet/neet-ug என்ற அதிகாரப்பூர்வ தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதை பார்த்து மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ளலாம் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

From around the web