மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 16.53% உள்ளது

 
மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 16.53% உள்ளது

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 177 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் இதுவரை 2,37,643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 16.53% உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1,51,317 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,303 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக திரிச்சூர் மாவட்டத்தில் 3,226 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மாநிலத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி பரிசீலித்து வருகிறோம் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

From around the web