திட்டமிட்ட படி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தப்படும்! விவசாயிகள் சங்கம் உறுதி!

 
திட்டமிட்ட படி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தப்படும்! விவசாயிகள் சங்கம் உறுதி!

மத்திய அரசு செயல்படுத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லி எல்லைகளில் கடந்த நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை. இந்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், போராட்டம் நீடித்து வருகிறது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் ஜூலை 22ம் தேதி முதல் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையும் வரை பாராளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

திட்டமிட்ட படி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தப்படும்! விவசாயிகள் சங்கம் உறுதி!

பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் சமயத்தில் விவசாயிகள் அதே இடத்தில் போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம். இதனால் விவசாயிகளை வேறு இடத்தில் போராட்டம் நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளது மாநில காவல்துறை நிர்வாகம். இது குறித்து மூத்த அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் திட்டமிட்டபடி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை தொடருவதில் விவசாய சங்கங்கள் உறுதியாக உள்ளன. மேலும் இது குறித்து வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பாராளுமன்றம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார். யாரையும் தொந்தரவு செய்யாமல் இது அமைதியான போராட்டமாக இருக்கும் எனவும், பாராளுமன்றத்திற்கு வெளியே உட்கார்ந்து போராடினாலும் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு எந்த இடைஞ்சலும் செய்ய மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

From around the web