கொரோனாவின் 2 அலைகளிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இது தான் !

 
கொரோனாவின் 2 அலைகளிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இது தான் !

இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது . இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முதல் அலையை காட்டிலும் 2வது அலையில் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இருந்த போதிலும் மத்திய சுகாதாரத்துறை முதல் அலையைவிட 2-வது அலையில் இந்தியா மிகப்பெரிய பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்தது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் உச்சநிலையில் இருந்தது.

கொரோனாவின் 2 அலைகளிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இது தான் !

இதில் இளைஞர்கள், இணை நோய் அல்லாதவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டது மக்கள் மனதில் கடும் அச்சத்தை உருவாகியது. 2 வது அலை கட்டுக்குள் வந்தாலும் 3 வது அலை வரக்கூடும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் 3வது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவி வருவதால், ஒவ்வொரு மாநில அரசுகளும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்துள்ளன.

இந்நிலையில் இரண்டு அலைகளிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கணக்கை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ‘‘முதல் அலையில் ஒரு வயதில் இருந்து 10 வயதிற்கு உட்பட்டோர் கொரோனா தொற்றால் 3.28 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டனர். 2வது அலையில் 3.05 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
11 வயதில் இருந்து 20 வயதிற்கு உட்பட்டோர் முதல் அலையில் 8.03%மும், 2வது அலையில் பாதிப்பு சதவீதம் 8.5%மும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய உச்சத்தில் இருந்த டேட்டாவை விட தற்போது 84 சதவீத பாதிப்பு குறைந்துள்ளது. சுமார் 75 நாட்கள் கடும் போராட்டத்திற்கும் பேரிழப்புக்களுக்கு பிறகு தான் இந்த நிலையை எட்ட முடிந்துள்ளது.

கொரோனாவின் 2 அலைகளிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இது தான் !

மேலும் அனைவரும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து தொடர்ந்து முகக்கவசம் சமூக இடைவெளி போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

From around the web