2-DG கொரோனா மருந்தின் விலை இது தான்! டாக்டர் ரெட்டிஸ் லேப்!
இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு ‘2-டிஜி’ என்ற டியோக்ஸி டி குளுக்கோஸ் என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்தை கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்தை பொதுமக்கள் அவசர பயன்பாட்டிற்காக மே17ம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்தது.
மத்திய பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் இம்மருந்தை உபயோகிக்க அனுமதி வழங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கும், வீட்டில் தனிமைப்படுத்தப் படுத்திக் கொண்டவர்களுக்கும் இம்மருந்தை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.டி.ஒ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள 2 டிஜி மருந்தின் விலை ரூ.990 எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், மத்திய மாநில அரசுகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.