முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!

 
முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!

ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் மழை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர இயலவில்லை என்றால், என்ன செய்யலாம் என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் திருப்பதி மலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் மலையில் பல்வேறு பகுதிகளில் காட்டாறு ஆவேசமாக பாய்ந்து ஓடுகிறது. இதையடுத்து மழை நின்று நிலைமை சீராகும் வரை பக்தர்கள் திருப்பதி கோயிலுக்கு வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!

ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், அதே முன்பதிவு அனுமதி டிக்கெட்டை வைத்து 6 மாதத்திற்குள் ஏழுமலையானை வழிபட புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு வருவதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 4 நாட்களாக திருப்பதி செல்லும் இரண்டு சாலைகளிலும் வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல நடந்து செல்லும் பக்தர்கள் பயன்படுத்தும் பாதையும் நன்றாகவுள்ளது. அதனால் அவற்றை பயன்படுத்த எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!

இதற்கிடையில் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் விரைந்து செயல்பட திருப்பதி தேவஸ்தான அமைப்பு முடிவு செய்துள்ளது. போர்கால அடிப்படையில் பணிகளை சீரமைக்கும் பொருட்டு ஜேசிபி இயந்திரங்கள்,ஹிட்டாசி எந்திரங்கள், லாரிகள், டிராக்டர்கள் ஆகியவற்றை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளன.

From around the web