இந்தியாவின் முக்கிய 4 பெருநகரத்தின் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

 
இந்தியாவின் முக்கிய 4 பெருநகரத்தின் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் இடைவெளியில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்து சென்று கொண்டு இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கமும் சிரமமும் அடைந்துள்ளனர். டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

அதன்படி இன்று டெல்லியில் பெட்ரோல், லிட்டர் 97.76 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 88.30 ரூபாய்க்கும், மும்பையில் பெட்ரோல், லிட்டர் 103.89 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 95.79 ரூபாய்க்கும், சென்னையில் பெட்ரோல், லிட்டர் 98.88 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.89 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் பெட்ரோல், லிட்டர் 97.63 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

From around the web