தாஜ்மஹாலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒரே நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதி

 
தாஜ்மஹாலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒரே நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதி

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது மாநில அரசுகள் பாதிப்புக்களுக்கேற்ப தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஏப்ரல் 15 முதல் பொதுமக்கள் அதிகமாக கூடும் வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் தாஜ்மகால், செங்கோட்டை உட்பட நினைவுச்சின்னங்களும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது கொரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதால் கடைகள், ஹோட்டல்கள் திறப்பு, போக்குவரத்து இயக்கம் என சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தாஜ்மஹாலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒரே நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதி

இந்த வரிசையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டு தலங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 3,700 சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை இன்று (ஜூன் 16) முதல் திறக்க தொல்லியல்துறை உத்தரவிட்டு உள்ளது.

தாஜ்மஹாலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒரே நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதி

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் மத்திய தொல்லியல் துறையின் இந்த திறப்பு நடவடிக்கை மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாக உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. மேலும் திறக்கப்படும் சுற்றுலா தலங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலாத்தளங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக புகழ்பெற்ற தாஜ்மஹால் பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒரே நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதி

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தாஜ்மஹால் திறக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலுக்குள் ஒரேநேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கூடுதல் நபர்கள் தாஜ்மஹாலுக்குள் நுழைய அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web