உஷார்.. இன்னும் 6-8 வாரங்களில் கொரோனா 3வது அலை! மருத்துவர்கள் எச்சரிக்கை!

 
உஷார்.. இன்னும் 6-8 வாரங்களில் கொரோனா 3வது அலை! மருத்துவர்கள் எச்சரிக்கை!

கொரோனா தொற்றின் 2வது அலை இப்போது தான் கொஞ்சம் குறைந்து வருகிறது என்று ஊரடங்கின் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மூச்சு விடச் செய்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் அடுத்த அதிர்ச்சியாக கொரோனா 3வது அலை இன்னும் ஆறு முதல் எட்டு வாரங்களில் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

முதல் அலையில் வயதானோர் பாதிக்கப்பட்டனர். கொரோனா 2வது அலையில் இளைஞர்கள் பலரும் உயிரிழந்தனர். இந்நிலையில் 3வது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் 3வது அலையால் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான தரவுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உஷார்.. இன்னும் 6-8 வாரங்களில் கொரோனா 3வது அலை! மருத்துவர்கள் எச்சரிக்கை!

இதற்கிடையே 18 வயதிற்கு கீழான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வுகளை பீகார் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகங்கள் தொடங்கி இருக்கின்றன. 12 – 16 வயதான குழந்தைகளுக்கு அமெரிக்கா, ஜெர்மனில் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இதற்கான சோதனைகள் பிரிட்டனில் நடைபெற்று வருகிறது.

உஷார்.. இன்னும் 6-8 வாரங்களில் கொரோனா 3வது அலை! மருத்துவர்கள் எச்சரிக்கை!

போலந்து, ஹங்கேரி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் அடுத்த சில வாரங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளன. சீனா ஏற்கனவே 3 முதல் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்து காலத்தில் வழங்குவதற்காக சினோபார்ம், சினோவேக் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தடுப்பூசிகள் விவகாரத்தில் இவ்வளவு முன்னெடுப்புகள் செய்யப்பட்டாலும் அதற்குள் 3வது அலை இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி விட்டால் அதனை சமாளிக்க மாநில அரசுகள் தயாராக இருக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

From around the web