உஷார்! இனி இன்சூரன்ஸ்ல இது இருந்தா தான் பணம் கிடைக்கும்!

 
உஷார்! இனி இன்சூரன்ஸ்ல இது இருந்தா தான் பணம் கிடைக்கும்!

உலகம் முழுவதுமே கொரோனா சீசன் 1,2,3 என்று மக்களை கதிகலங்க வைத்துள்ளது. நிர்வாகம், சுற்றுலா, போக்குவரத்து, ஹோட்டல், வணிகம் என்று பல துறைகளையும் சின்னாப்பின்னமாக்கி இழுத்து மூட வைத்துள்ளது கொரோனா.

இந்நிலையில், இந்த கொரோனா தொற்று இன்சூரன்ஸ் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் தான் க்ளைம் செய்ய முடியும் என்று அறிவிக்கத் துவங்கியிருக்கின்றன.

உஷார்! இனி இன்சூரன்ஸ்ல இது இருந்தா தான் பணம் கிடைக்கும்!

ஒருவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போட்டிருந்தால் தான் டெர்ம் இன்சூரன்ஸ் பெற முடியும் என்றும் அதற்கான சான்றிதழ் கட்டாயம் என்றும் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் டாடா ஏஐஏ நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இறுதி தடுப்பூசி சான்றிதழ்களை காட்டினால் மட்டுமே இன்சூரன்ஸ் எடுக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட யாராக இருந்தாலும் டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் என்கிறது டாடா ஏஐஏ.

உஷார்! இனி இன்சூரன்ஸ்ல இது இருந்தா தான் பணம் கிடைக்கும்!

இந்த விஷயம் காப்பீட்டாளர்களின் தரப்பில் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், தடுப்பூசி போடாதவர்கள் மத்தியிலும் இது தாக்கத்தினை ஏற்படுத்தும். தடுப்பூசி போட நினைப்பவர்கள் பற்றாக்குறையால் காத்திருக்க வேண்டிய அவசியம் நிலவி வருகின்றது. இன்னும் சிலர் முதல் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இரண்டாவது தடுப்பூசிக்காக காத்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இது சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.

From around the web