பள்ளிகளை எப்போது திறக்கலாம்?! உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி விளக்கம் !

 
பள்ளிகளை எப்போது  திறக்கலாம்?! உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி விளக்கம் !

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. சில பகுதிகளில் மீண்டும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஜுலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை.

பள்ளிகளை எப்போது  திறக்கலாம்?! உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி விளக்கம் !

இந்நிலையில் தனியார் பள்ளி சங்கத்தை சேர்ந்தவர்கள் பள்ளியை திறக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாக தனியார் பள்ளி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக மாநில அரசுகள் பள்ளிகளைத் திறப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின் பள்ளிகளை திறக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கூட்டம் அதிகமாக இருந்தால் சமூக பரவல் ஏற்படும் என்பதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web