டெல்டா ப்ளஸ் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுமா? மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!

 
டெல்டா ப்ளஸ் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுமா? மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் கடும் விளைவுகள் ஏற்பட்டன. இதனையடுத்து பல்வேறு பூஞ்சை நோய் பாதிப்புகளும் ஏற்பட தொடங்கியுள்ளன. இதன் காரணமாக இந்தியா முழுவதுமே அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளையும் சந்தித்தது.

தற்போது கொரோனா வைரசானது உருமாறிய வகையில் பல்வேறு வடிவங்களை எடுத்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, 2வது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.

டெல்டா ப்ளஸ் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுமா? மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!

இந்நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வகை கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா , மத்திய பிரதேசம், கேரளா மற்றும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் அதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளதாக ஐ.சி.எம். ஆர். தெரிவித்துள்ளது.

3 வது அலை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த செய்திக்குறிப்பில் கொரோனா 2வது அலை போன்று 3வது அலை மிக கடுமையாக இருக்காது
கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் முறையான கொரோனா அணுகுமுறைகள் ஆகியவை இந்த அலைகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். டெல்டா பிளஸ் கொரோனா வகை மீது தடுப்பூசியின் விளைவு பற்றிய ஆய்வு நடந்து வருகிறது.

டெல்டா ப்ளஸ் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுமா? மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!

இந்தியாவில் இதுவரை 10 மாநிலங்களில் 49 டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுவது குறித்து மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு முடிவுகள் இன்னும் 7 முதல் 10 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

From around the web