மறந்துடாதீங்க... வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து இதை செய்து வந்தா செல்வமும், ஆயுளும் அதிகரிக்கும்!
மிஸ் பண்ணாதீங்க... வாரம் முழுவதும் கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் கூட வெள்ளிக்கிழமைகளில் ஒரு 10 நிமிஷங்களையாவது பிரார்த்தனைக்கு என்று ஒதுக்குங்க. அது கடவுளுக்கான நேரம் கிடையாது. உங்களுக்கான நேரம். உங்கள் அகத்தை தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான நேரம். மனைவி, பிள்ளைகளை எல்லாம் விட்டுப் பிரிந்து கடல் கடந்து சம்பாதிப்பதற்காக செல்கிறோமே எதற்காக? வெறும் பணத்துக்காக மட்டுமா? அந்த பணத்தை சேர்த்துக் கொண்டு, பின்னர், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க தானே? ஒரு மனுஷனுக்கு பணம் எவ்வளவு முக்கியமோ அதை விட ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம். பணத்தையும், ஆரோக்கியத்தையும் தரும் இந்த ஒரு காரியத்தை மட்டும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மறக்காம தொடர்ந்து செய்து வாங்க.
அதிர்ஷ்டம், பணம், செல்வம், நிம்மதி, செழிப்பு, வசதி என நீங்கள் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு எல்லாம் முக்கியமான கிழமையாக இருப்பது வெள்ளிக்கிழமை தான். அதே சமயம், இத்தனையையும் தரும் மகாலட்சுமி எதில் எல்லாம் வாசம் செய்கிறாள் என்று தெரியுமா? வாசனையான, சுகந்தம் தரும் பொருட்களில் எல்லாம் நிச்சயமாகவும், நிரந்தரமாகவும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதுவும், வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் சாம்பிராணி தூபம் போட்டால் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தரமாகவே சந்தோஷத்துடன் வாசம் செய்வாள் என்பது ஐதீகம். இது காலம் காலமாக நம் வீடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.
தனித்த சாம்பிராணி என்று இல்லாமல் நம் தேவைகளுக்கேற்ப சாம்பிராணியுடன் சில பொருட்களைச் சேர்த்து தூபம் இட வீட்டில் மங்கலங்கள் நிறையும் என்பது உறுதி. அந்த வகையில் சாம்பிராணியுடன் எந்தெந்த பொருட்களை சேர்த்தால், என்னென்ன பலன்களைப் பெறலாம் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனைக்கேற்ப பலனைப் பெறுங்கள்.
சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.
சாம்பிராணியில் அகில் சேர்த்து தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.
சாம்பிராணியில் தூதுவளையை சேர்த்து தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.
சாம்பிராணியில் சந்தனத்தை சேர்த்து தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
சாம்பிராணியில் அருகம்புல் பொடியை சேர்த்து தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்..
சாம்பிராணியில் வெட்டிவேரை சேர்த்து தூபமிட காரியசித்தி உண்டாகும்.
சாம்பிராணியில் வேப்பிலையை சேர்த்து தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
சாம்பிராணியில் வெண்கடுகை சேர்த்து தூபமிட பகைமை விலகும்.
சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை சேர்த்து தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.
சாம்பிராணியில் ஜவ்வாது சேர்த்து தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.
சாம்பிராணியில் வேப்பம்பட்டையை சேர்த்து தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.
சாம்பிராணியில் நாய் கடுகை சேர்த்து தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.
சாம்பிராணியில் காய்ந்த துளசியை சேர்த்து தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.
சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை சேர்த்து தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை சேர்த்து தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்.
சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை சேர்த்து தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும். இதில் உங்களுக்கு என்ன தேவையோ அதற்குரிய மூலிகைப் பொடியைத் தூவி சாம்பிராணியில் தூபமிடலாம். இதை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தால் பலன் அதிகரிக்கும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!