கண்ணாடி அணிவதால்.. படரும் கருமை…! இப்படி செ ய்து பாருங்க… பளீச் முகமா மாறிவிடும்!

 
கண்ணாடி அணிவதால்.. படரும் கருமை…! இப்படி செ ய்து பாருங்க… பளீச் முகமா மாறிவிடும்!

இன்று உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கண்ணாடி அணிந்துள்ளனர்.
கண்ணாடி அணிபவர்களின் மூக்கு பகுதியில் பிரேம்கள் அழுத்தமாக பதிவதால் காலப்போக்கில் தழும்புகளும், வடுக்களும் ஏற்பட்டு அவை நிரந்தரமாக தங்கி விடுகின்றன. இந்த தழும்பால் ஏற்படும் வடுக்களை போக்க என்ன செய்யலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
டிஜிட்டல் சாதனங்களை தொடர்ந்து நீண்ட நேரம் பயன்படுத்துவதுதால் வேறு வழியில்லை. கண் சார்ந்த பிரச்சினைகளுக்கு கண்ணாடி அணிவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது.


வடுக்களை போக்க கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி ஜெல்லை எடுத்து வடுக்கள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் அழுத்தமாக மசாஜ் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம்.
உருளைக்கிழங்கு சாற்றை எடுத்து அதை வடுக்கள் இருக்கும் பகுதியில் அழுத்தமாக தேய்த்துவிட முகத்தை பிரகாசமாக்குகிறது. கண்களை சுற்றியுள்ள கருவளையம், கரும்புள்ளிகளை அகற்றவும் உதவுகிறது. உருளைக்கிழங்கை நறுக்கி மிக்சியில் அரைத்து அதன் சாற்றை பஞ்சில் முக்கி தழும்புகள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் தடவ வேண்டும். வாரத்திற்கு இருமுறைகள் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் தழும்புகள் மறையத் தொடங்கும்.

கண்ணாடி அணிவதால்.. படரும் கருமை…! இப்படி செ ய்து பாருங்க… பளீச் முகமா மாறிவிடும்!

வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வடுக்கள் இருக்கும் பகுதியில் வைத்து 30 நிமிடங்கள் கழித்து எடுத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து மூக்கு பகுதியை சுற்றி அழுத்தமாக தடவி வர மூக்கு பகுதியில் குளிர்ச்சி பரவும். அந்த குளிர்ச்சி நீங்கியதும் முகத்தை கழுவி விடலாம் இதில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து கடைப்பிடித்து வர தழும்புகளும், வடுக்களும் மறைந்து நாளடைவில் முகமும், கண்களும் பிரகாசத்துடன் அமையப் பெறலாம்

From around the web