சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!

 
சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் திவீரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சிறுசேமிப்புக்களுக்கான வட்டி விகிதம் குறித்து மத்திய அரசின் அதிகார பூர்வ வட்டாரங்கள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன.

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!

அதன்படி தேசிய சேமிப்பு பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம் மற்றும் பி.பி.எப். உள்ளிட்ட அனைத்து சிறுசேமிப்புளுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கு சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!

அதன்படி ஜூலையில் சிறுசேமிப்புகளுக்காக வட்டியை மத்திய அரசு குறைக்க உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் கடன் வாங்கும் செலவினை குறைக்கும் வகையிலும், நிலையான வளர்ச்சியின் பாதையில் திரும்பவும், நிதி மற்றும் நாணய ஆதரவு தேவை என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தேசிய சேமிப்பு பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம் மற்றும் பி.பி.எப். ஆகிய அனைத்து சிறுசேமிப்புளுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web