கொரோனாவைஅஞ்சி ஓடவைக்கும் இயற்கை ஆண்டி ஆக்சிடென்ட் !

 
கொரோனாவைஅஞ்சி ஓடவைக்கும் இயற்கை ஆண்டி ஆக்சிடென்ட் !


உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் இயற்கையான முறையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதே புத்திசாலித்தனம். தமிழக பாரம்பரிய உணவில் காரத்திற்கு இஞ்சியும், மிளகும் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. அந்த வகையில் இஞ்சியின் பயன் மகத்தானது. இதை காயவைத்து சுக்காகவும் பயன்படுத்தலாம். சுக்கு மிஞ்சிய நோயும் இல்லை என்பது பழமொழி. இஞ்சிக்கு உடலை உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு இருந்தாலும் கபம் மற்றும் வாதத்தால் உருவாகும் நோய்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது

கொரோனாவைஅஞ்சி ஓடவைக்கும் இயற்கை ஆண்டி ஆக்சிடென்ட் !


வளரும் பிள்ளைகளுக்கு இஞ்சி ஞாபக சக்தியை அதிகரிக்கும் . குடலில் சேரும் பூச்சிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இஞ்சிச்சாறை உபயோகிக்கலாம். செரிமான பிரச்சனை இருப்பவர்கள், பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

கொரோனாவைஅஞ்சி ஓடவைக்கும் இயற்கை ஆண்டி ஆக்சிடென்ட் !

சளி, இருமல் , ஜலதோஷம், தொண்டை வலி, பித்தம் ஆகியவற்றிற்கு இஞ்சி கசாயம் போட்டு குடிக்க நல்ல குணம் காணலாம்.இத்தனை மகத்துவம் கொண்ட இஞ்சியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இஞ்சியின் தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

கொரோனாவைஅஞ்சி ஓடவைக்கும் இயற்கை ஆண்டி ஆக்சிடென்ட் !

ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும்.
தோல் நீக்கிய இஞ்சியை சிறு துண்டுகளாக்கி தேனில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர செரிமானப் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக செயல்படலாம்.

மேலும் கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளான தொண்டை வலி, சளி, இருமல் , செரிமானப் பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் காப்பதில் இஞ்சி முதலிடத்தில் இருக்கிறது என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

From around the web