சூப்பர் நியூஸ்! கொரோனாவிற்கு மேலும் ஒரு புதிய மருந்து !

 
சூப்பர் நியூஸ்! கொரோனாவிற்கு மேலும் ஒரு புதிய மருந்து !

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா ஏற்கனவே டி.ஆர்.டி.ஓ. வுடன் இணைந்து பவுடர் வடிவிலான ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளது. 2-டிஜி என்று அழைக்கப்படுகிற இந்த மருந்து மருத்துவமனைகளில் தற்போது கிடைக்கிறது. இதனை பயன்படுத்த தொடங்கிய பிறகு கொரோனா நோயாளிகள் விரைவாக மீண்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சூப்பர் நியூஸ்! கொரோனாவிற்கு மேலும் ஒரு புதிய மருந்து !

இந்நிலையில் தற்போது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் புதிதாக ‘கொல்கிசின்’ என்ற மருந்தை கண்டுபிடித்து உள்ளது. இந்த மருந்துக்கான இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அடுத்த கட்டமாக நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படும். இந்த பரிசோதனையில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் மற்றொரு சார்பு நிறுவனமான ஐதராபாத்தில் உள்ள இந்திய வேதியியல் கல்வி நிறுவனமும், ஜம்முவின் சி.எஸ்.ஐ.ஆர். ஒருங்கிணைந்த மருந்து நிறுவனமும் இணைந்து செயல்படுகின்றன.

சூப்பர் நியூஸ்! கொரோனாவிற்கு மேலும் ஒரு புதிய மருந்து !

இந்த மருந்தினால் கொரோனாவுடன் இணை நோயாக இதய நோயைக் கொண்டிருக்கிறவர்களின் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில் “இந்த மருந்தின் மருத்துவ பரிசோதனைக்காக நோயாளிகளை பதிவு செய்வது ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கி விட்டது. இந்த மருத்துவ பரிசோதனை 10 வாரங்களில் முடிந்து விடும். இதன் முடிவைப் பொறுத்து இந்திய மக்களுக்கு இந்த மருந்து பெரிய அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web