வருஷ கடைசி... டிசம்பரில் 18 நாட்களுக்கு வங்கி விடுமுறை!

 
வங்கி விடுமுறை

இப்போது தான் வருஷ பிறப்பு வந்த மாதிரி இருக்குன்னு நீங்க தலைப்பைப் படிச்சதும் நினைச்சது இங்க வரைக்கும் கேட்குது. ஆமாங்க... அதுக்குள்ள இந்த வருஷமும் முடிய போகுது. நியூ இயர் கொண்டாட்டங்களை இப்போதே திட்டமிட்டுக்கோங்க. அப்படியே போன வருஷ ஆரம்பத்துல, புது வருஷத்துல இருந்து  இதைச் செய்ய போகிறேன்னு முடிவு செய்தீங்க இல்லையா? அது என்னன்னு ஞாபகத்துக்கு வருதான்னு யோசிச்சு பாருங்க... வந்தா, அதை இந்த வருஷத்துலயாவது செய்ய முயற்சிக்கலாம். அடுத்த வாரத்துல பொறக்கப் போற டிசம்பர் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் உட்பட 18 நாட்கள் வங்கிகள் இயங்காது என வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.

பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

தொடர்ந்து 2 நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!!

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. டிசம்பர் மாதத்தில் சுமார் 18 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

டிசம்பர் 1, 2023 - வெள்ளிக்கிழமை - மாநில தொடக்க நாள்/சுதேசி நம்பிக்கை நாள் (நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம்)
டிசம்பர் 3, 2023 - ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 4, 2023 - திங்கட்கிழமை - புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (கோவா, திரிபுரா)
டிசம்பர் 9, 2023 - சனிக்கிழமை - 2வது சனிக்கிழமை
டிசம்பர் 10, 2023 - ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 12, 2023 - செவ்வாய்க்கிழமை - பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயா)
டிசம்பர் 13, 2023 - புதன்கிழமை - லோசூங்/நம்சூங் (சிக்கிம்)
டிசம்பர் 14, 2023 - வியாழக்கிழமை - லோசூங்/நம்சூங் (சிக்கிம்)
டிசம்பர் 17, 2023 - ஞாயிற்றுக்கிழமை

டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!
டிசம்பர் 18, 2023 - திங்கட்கிழமை - யூ சோஸோதாமின் இறந்த நாள் (மேகாலயா)
டிசம்பர் 19, 2023 - செவ்வாய்க்கிழமை - கோவா விடுதலை நாள் (கோவா)
டிசம்பர் 23, 2023 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை
டிசம்பர் 24, 2023 - ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 25, 2023 - திங்கட்கிழமை - கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26, 2023 - செவ்வாய்க்கிழமை - கிறிஸ்துமஸ் (மேகாலயா, தெலுங்கானா)
டிசம்பர் 27, 2023 - புதன்கிழமை - கிறிஸ்துமஸ் (மிசோரம்)
டிசம்பர் 30, 2023 - சனிக்கிழமை - யு கியாங் நங்பா (சிக்கிம், மேகாலயா)
டிசம்பர் 31, 2023 - ஞாயிற்றுக்கிழமை

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web