தூத்துக்குடி : சூரசம்ஹாரம்... நவம்பர் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை... கலெக்டர் அறிவிப்பு!

 
உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் நவம்பர் 18ம் தேதி சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் தூத்துக்குடி  மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோயில்

தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றின் போது மக்களின் பாதுகாப்பு கருதி அந்தந்த பகுதிகளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் நவம்பர் 18ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்கார விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த நேரங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி

மேலும் அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் வரும் நவம்பர் 18ம் தேதி செயல்படாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் மாற்று வேலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விழாவில் அரசியல் தலைவர்களும், லட்சக்கணக்கான பக்தர்களும் கலந்து கொள்ள இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web