Connect with us

சினிமா

அமேசானுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குநர் இமயம்!

Published

on


அமேசான் வலைதளத்தில் தி பேமிலி மேன் என்ற வெப் சிரீஸ் ஒளிபரப்பபடுகிறது . இந்தத் தொடர் ஈழ போராட்டத்தை மையமாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. ஈழ போராளிகள் இந்திய பிரதமரை கொல்ல திட்டமிடுவதாக களம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து செயல்படும் ஈழ பெண் பாத்திரத்தில் சமந்தா ராஜி என்ற பெயரில் நடித்துள்ளார். இந்த தொடர் இந்த கதைக்களம் காரணமாக தமிழர்கள் இடையே கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.


இந்நிலையில், ‘தி பேமிலி மேன் 2’ தொடர் ஒளிப்பரப்பை அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து நிறுத்த வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
“எங்கள் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக் களத்தையும்,அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.

அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும்.

இத்தொடரில் தமிழ், முஸ்லீம் , வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.
தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.”

செய்திகள்3 hours ago

அதிர்ச்சி! உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் கொரோனாவுக்கு பலி!

அரசியல்4 hours ago

வறண்டு கிடக்கும் கோயில் குளங்கள்! கவனிப்பாரா அறநிலையத்துறை அமைச்சர்!

தென்காசி5 hours ago

தென்காசி தொகுதியில் எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு

இந்தியா5 hours ago

தாஸ்மஹாலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒரே நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதி

அரசியல்6 hours ago

1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைப்பு பற்றி விசாரணைக்கு ஆணையிடுங்கள்! – டாக்டர் ராமதாஸ்

இந்தியா6 hours ago

ஜூலை 1-ந் தேதி எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடக்கம்

செய்திகள்7 hours ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு

குற்றம்7 hours ago

டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது

இந்தியா8 hours ago

இந்தியாவில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

திருச்சிராப்பள்ளி8 hours ago

எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்! தெற்கு ரயில்வே!

அரசியல்2 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்1 month ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்2 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்2 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்2 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்3 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்3 months ago

இன்று (ஏப்ரல் 02) காலை நிலவரப்படி தங்கம் சவரன் 34 ஆயிரத்தை கடந்தது!..

செய்திகள்3 months ago

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பகுதியாக ரத்து! தெற்கு ரயில்வே !

அரசியல்1 month ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 weeks ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending