ஏர் இந்தியா மீது அட்டாக் கன்பார்ம்.. பயணிகளே உஷார்.. எச்சரித்த காலிஸ்தான் பிரிவினைவாதி !

 
 குரபத்வந்த் சிங் பண்ணு

காலிஸ்தான் பிரிவினைவாதி குரபத்வந்த் சிங் பண்ணு. தற்போது ஏர் இந்தியா பயணிகளை பகிரங்கமாக மிரட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது சீக்கிய இனப்படுகொலையின் 40வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அந்த நாட்களில் யாரும் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார். ஏர் இந்தியா விமானங்கள் மீது தாக்குதல்கள் நடக்கலாம் என்பதால் அந்த தேதிகளில் யாரும் பயணம் செய்ய வேண்டாம் என்றார். கடந்த ஆண்டும் இதேபோன்ற எச்சரிக்கையை அவர் விடுத்திருந்தார்.

ஏர் இந்தியா

மேலும், சமீப காலமாக, நாட்டில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவங்கள், விமான நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது காலிஸ்தான் பிரிவினைவாதி நேரடியாக விமானங்களை மிரட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web