இதுக்கெல்லாம் தடை சொல்ல முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி!

 
இதுக்கெல்லாம் தடை சொல்ல முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி!

தலைநகர் டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், டெல்லி நகரில் உள்ள சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், வழக்கமான நாட்களை விட தற்போது கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால் பிச்சைக்காரர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் இதனால் நகரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது . அவர்கள் உணவுக்கும், வாழ்வாதாரத்திற்கும் வேறு வழி இல்லாத நிலையில் தான் பிச்சை எடுப்பதற்காக தெருக்களுக்கு வருகிறார்கள். அவர்களை வறுமை வாட்டும் போது வீதிக்கு வர வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

இதுக்கெல்லாம் தடை சொல்ல முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி!

உச்சநீதிமன்றத்தால் அவர்களை தடுப்பதற்கு உத்தரவு போட முடியாது. இது ஒரு சமூக பிரச்சினை. அரசு, சமூக நல கொள்கைகளை வகுத்து இதற்கு தீர்வு காண வேண்டும். அவர்கள் நம் கண்ணில் படக்கூடாது என்று எந்த உத்தரவும் போட முடியாது. பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு அளிக்கக்கூடிய திட்டங்களை அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.

இதுக்கெல்லாம் தடை சொல்ல முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி!

இது குறித்து விரிவான விளக்கம் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதால் மத்திய, மாநில அரசு விளக்கம் அளிக்கும் வரை இந்த வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

From around the web