சூப்பர் நியூஸ்! வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்!

 
சூப்பர் நியூஸ்! வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்!

இன்று மொபைல் இல்லாத கரங்களே உலகில் இல்லை. மொபைல் இல்லாத வாழ்க்கையே இல்லை. அதிலும் கோடிக்கணக்கான வாசகர்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலி வாட்ஸ் அப். வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் செயலியை மேம்படுத்தவும் அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை அதில் புகுத்தி வருகிறது. மேலும் தனிநபர் தகவல் பாதுகாப்புக்காகவும், சமூக அக்கறைக்காகவும் பல்வேறு அப்டேட்கள் கொண்டுவரப் படுகின்றன.


ஆரம்பத்தில் தகவல் பரிமாற்ற செயலியாக மட்டுமே இருந்த வாட்ஸ் அப்பில் , ஆடியோ கால்கள், வீடியோ கால் வசதி, பணப்பரிமாற்றம் என அடுத்தடுத்த அப்டேட்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் புதிய வீடியோ கால் அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது .
அதன்படி குரூப் வீடியோ காலில் அழைக்கப்படும் போது பயனர் இணையவில்லை என்றாலும், அதற்கான அழைப்பு வெய்ட்டிங்கில் வைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட குரூப் இயக்கத்தில் இருக்க வேண்டும்.

சூப்பர் நியூஸ்! வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்!

யாராவது குரூப் கால் அழைப்பு கொடுத்தால் ஸ்கிரீனில் அது தெரியும். குரூப் கால் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால் மறுபடி எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இணைந்து கொள்ளலாம். பயனர்கள் “Tap to join” மூலம் இணைந்து கொள்ளலாம். வீடியோ காலை தவிர்க்க ‘ignore’ஆப்ஷனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சூப்பர் நியூஸ்! வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்!


இந்த புது அப்டேட்டால் பயனாளர்களின் பிரைவசிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என வாட்ஸ் அப் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட்டால் இனி குரூப் அழைப்புகளை பயனர்கள் மிஸ் செய்ய மாட்டார்கள் எனவும், மறுபடியும் எந்த நேரத்திலும் குரூப் அழைப்பில் இணைந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ அழைப்புகளுக்கு மட்டுமின்றி வாய்ஸ் அழைப்புகளுக்கும் இந்த அப்டேட் பொருந்தும் எனவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

From around the web