பரபர வீடியோ!அல்கொய்தாதலைவர் அல் ஜவாஹிரி !

2001 செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள், ராணுவ தலைமையகம் பென்டகன், பென்சில்வேனியா என அடுத்தடுத்து நடைபெற்ற 5 தாக்குதல்களை கண்டு உலகமே அச்சத்தில் உறைந்தது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு அல் கொய்தா அமைப்பு பொறுப்பேற்றது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அல் கொய்தாவின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனை அழிக்க ஆப்கானிஸ்தானிடம் உதவி கோரியது. பின்னர் 2011ல் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத்தில்
 

2001 செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள், ராணுவ தலைமையகம் பென்டகன், பென்சில்வேனியா என அடுத்தடுத்து நடைபெற்ற 5 தாக்குதல்களை கண்டு உலகமே அச்சத்தில் உறைந்தது.

பரபர வீடியோ!அல்கொய்தாதலைவர் அல் ஜவாஹிரி !


இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு அல் கொய்தா அமைப்பு பொறுப்பேற்றது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அல் கொய்தாவின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனை அழிக்க ஆப்கானிஸ்தானிடம் உதவி கோரியது. பின்னர் 2011ல் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் கொல்லப்பட்டார்.

பரபர வீடியோ!அல்கொய்தாதலைவர் அல் ஜவாஹிரி !


ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அல் கொய்தா அழிந்துவிடும் என நினைத்த நிலையில் அதன் புதிய தலைவராக அய்மான் அல் ஜவாஹிரி பொறுப்பேற்றதாக சொல்லப்பட்டது. ஆனால், அவர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் தற்போது செப்.11ம் தேதி அமெரிக்கா இரட்டைக் கோபுர தாக்குதலின் 20-வது ஆண்டு நினைவு தினத்தைக் கடைபிடிக்க நாளில் அய்மான் அல் ஜவாஹிரி தோன்றும் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு மணி நேரம் உரையாற்றியுள்ளார்.
வீடியோவில் சிரியாவில் ரஷ்ய ராணுவத் தளத்தை அழித்தது குறித்து பேசியுள்ளார். இந்த வீடியோ அமெரிக்காவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

From around the web