குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கும் 1 கோடி குழந்தைகள் ! யுனிசெஃப்!

குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கும் 1 கோடி குழந்தைகள் ! யுனிசெஃப்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. பெரும்பாலான இடங்களில் தாலிபான்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், போதிய உணவு, மருந்து, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளின்றி 5 வயதுக்கு உட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.

குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கும் 1 கோடி குழந்தைகள் ! யுனிசெஃப்!

இதுகுறித்து யுனிசெப் அமைப்பின் தலைமை தொடர்பு அதிகாரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆப்கானிஸ்தானில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் கிடைக்காத சூழலில் பல குழந்தைகள் தேவையான அளவு உணவும் , ஊட்டச்சத்தும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. அவர்களுக்கு மனிதநேய உதவி அளிக்க வேண்டிய அவசர தேவை உள்ளது.

குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கும் 1 கோடி குழந்தைகள் ! யுனிசெஃப்!

வறட்சியால் குடிநீர் கூட கிடைக்கவில்லை என்பது தான் மிக வேதனையான விஷயம். தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு இந்த நிலை மேலும் அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.

From around the web