சொகுசு பேருந்தில் பயணம் செய்த இளைஞரிடமிருந்து ரூ.1.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!
கர்நாடகா அரசு வோல்வோ பேருந்தில் பயணம் செய்த இளைஞரிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான ஹவாலா பணம் வையநாடு மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மலப்புரம் மாவட்டம் திரூரங்காடி, வள்ளிக்குன்னைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர், பெங்களூருவில் இருந்து கோழிக்கோடு நோக்கி கர்நாடகா ஆர்.டி.சி. வோல்வோ ஸ்லீப்பர் பேருந்தில் பயணம் செய்து வந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் மைசூர்–கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் மீணங்காடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டபோது, எக்சைஸ் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது ரசாக் வைத்திருந்த மூட்டைகளில் ஆவணமின்றி கடத்தப்பட்ட ரூ.1.36 கோடி பணம் மீட்கப்பட்டது. ஹவாலா வழியாக கடத்தப்பட்டதாக நம்பப்படும் இப்பணத்தை எக்சைஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சோதனையை சுல்தான் பாதேரி எக்சைஸ் வட்ட அதிகாரி சுனில் மற்றும் எக்சைஸ் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தலைமையிலான குழு, வையநாடு துணை எக்சைஸ் ஆணையாளர் ஏ.ஜே. ஷாஜியின் மேற்பார்வையில் நடத்தியது.பறிமுதல் செய்யப்பட்ட பணம், மேலதிக விசாரணைக்காக வருமான வரித்துறைக்கு ஒப்படைக்கப்படும் என துணை எக்சைஸ் ஆணையாளர் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
