மகாராஷ்டிரா ரயில் விபத்தில் 12 பேர் பரிதாப பலி , 4 பேர் கவலைக்கிடம், 10 பேர் படுகாயம்... !

 
ரயில் விபத்து


 மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று ஜனவரி 22ம் தேதி  மாலை 5 மணிக்கு   மும்பை நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில்  விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் வேறு ஒரு ரயிலில் மோதி  பயணிகளில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 10 பயணிகள் படுகாயமுற்றனர் இதில் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது 
ஜல்கான் மாவட்ட பொறுப்பு மாநில அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல்    ” உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் பொதுப்  பெட்டியில் பயணித்த பயணிகள் தான் ரயிலை நிறுத்த யாரோ ஒருவர் ரயில் பெட்டியில் உள்ள அவசரகால சங்கிலியை இழுத்துள்ளனர்.  சங்கிலியை இழுத்ததை அடுத்து அவசரகால பிரேக் ரயிலில் பயன்படுத்தப்பட்டு ரயில் சட்டென நிறுத்தப்பட்டது.


அவசரகால பிரேக் என்பதால் தண்டவாளத்தில் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் பறந்தன.  இதனை பொதுப் பெட்டியில் இருந்த பயணிகள், ரயிலில் தீப்பிடித்துவிட்டது என  நம்பி, அச்சத்தில், ரயிலில் இருந்து  குதித்து ஓடியுள்ளனர். அப்போது அருகே இருந்த தண்டவாளத்தில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் இந்த பயணிகள் மீது அதே வேகத்தில் மோதியது. இதன் விளைவாகவே இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டதாக” கூறியுள்ளார்.  இது குறித்து மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் ஸ்வப்னில் நிலா  , “ ரயிலில் தீ பிடித்தது எனும் வதந்தியால் பயணிகள்  குதித்து ஓடுகையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அவசரகால சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியது யார், எதற்காக ரயிலை நிறுத்தினார்கள் என விசாரணை நடைபெற்று வருகிறது.” எனக் கூறியுள்ளார்.  

ரயில்
ஜல்கான் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத்  , ” புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்ததில் 9 பேர் ஆண்களும், 3 பேர் பெண்களும் அடங்குவர். அவர்களில் 3 பேர் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள். நேபாள குடிமக்கள் உட்பட 6  பேரின் உடல்கள்  மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. காயமடைந்த 10 பேரில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.” எனக் கூறிஉள்ளார்.  இந்த விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் ” உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5000 ம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.  மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநில அரசு சார்பில் உயிரிழநதோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்  நிதியுதவி அளிக்கப்படும்” என அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களின் அனைத்து மருத்துவச் செலவுகளையும் மாநில அரசு ஏற்கும் என பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web